வெங்காயம், பூண்டு உள்ளிட்ட காய்கறிகளின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதால் இல்லதரசிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
சில்லறை விற்பனைச் சந்தையில் ஒரு கிலோ பூண்டு விலை 60 ரூபாய் முதல் 65 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. வெங்காயம் விலையும் கிலோவுக்கு 20 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.
கடந்த வாரத்தில் 220 ரூபாய்க்கு விற்கப்பட்ட பூண்டு தற்போது 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வரும் நாட்களில் பூண்டு விலையேற்றம் 500 ரூபாய்க்கு அதிகமாக விற்பனை செய்யப்படும் என வியாபாரிகள் கூறுகின்றனர்.