மாமியார் மருமகள் மாறி மாறி ஊட்டி கொண்டால் உணவு இலவசம்!

கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தின் அருகே உள்ள பிரபல தனியார் உணவகத்தில் உலக மகளிர் தினத்தை ஒட்டி பெண்களை போற்றும் வகையில் மாமியார் மருமகள் அன்பை பரிமாறிக் கொண்டு சாப்பிட்டால் உணவு இலவசம் என்ற அறிவிப்பினை நேற்று வெளியிட்டனர்.

இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை முதலே கள்ளக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மாமியார் மருமகள் அன்பை பரிமாறிக் கொள்ளும் வகையில் உணவை ஊட்டுக் கொண்டு மகிழ்ந்தனர்.

RELATED ARTICLES

Recent News