சென்னை கோயம்பேடு தனியார் நட்ச்சத்திர மதுபான பாரில் நான்கு இளம்பெண்கள் (செப்.8) நேற்று நள்ளிரவு மது அருந்தி உள்ளனர்
நேரம் தாமதமானதை அடுத்து பாரில் உள்ள ஊழியர்கள் அவர்களை வெளியே செல்லும்படி அறிவுறுத்தி உள்ளனர். ஆனால் அந்த நான்கு இளம் பெண்கள் பாரில் பணியாற்றும் ஊழியர்களை தகாத வார்த்தைகளால் பேசி உள்ளனர்.
இது தொடர்பாக ஊழியர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர் இந்த தகவலின் அடிப்படையில் மதுவிலக்கு பிரிவில் பணியாற்றும் உதவி ஆய்வாளர் ஒருவர் போலீசார் உடன் சம்பவ இடத்திற்கு வந்த பொழுது அந்த உதவியை ஆய்வாளரை நான்கு இளம் பெண்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.
மேலும் கோயம்பேடு காவல் நிலையத்தில் வந்த போலீசாரிடமும் சரமாரியான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று நள்ளிரவு நடந்த இந்த சம்பவத்தில் நான்கு பெண்களையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் எச்சரித்து அவர்களை ஆட்டோ மூலம் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இன்று காலை அவர்களை காவல் நிலையம் வருமாறு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.