உத்தர பிரதேச மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் காலமானார்..!!

உத்தர பிரதேச மாநிலத்தின் முன்னாள் ஆளுநரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அஜீஸ் குரேஷி (வயது 83) உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.

அஜீஸ் குரேஷி உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் ஆளுநராக பணியாற்றியுள்ளார்.

கடந்த சில காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர், போபாலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இன்று காலை 11 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இவருடைய மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News