முன்னாள் மேயர் சைதை துரைசாமி தனியார் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி மூச்சு திணறல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து பரிசோதனை செய்யப்பட்டதில் நிமோனியா காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.