நாகப்பட்டினம் மாவட்டம், அண்ணா சிலை அருகே உள்ள சார் அகமது தெருவில், பாத்திரக்கடை நடத்தி வருபவர் சரவண முருகன். இவர் வியாபாரம் தொடர்பாக வாஞ்சூரை சேர்ந்த லோகேஸ் என்பவரிடம் ரூபாய் ஒரு லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் பணம் வாங்கிய அன்றிலிருந்து லோகேஸ் தலைமறைவு ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், திடீரென்று நேற்றைய முந்தினம் , முருகன் மற்றும் , ஹரி ஆகியோருடன், 4 கூலிப்படையினருடன் வந்து, சரவண முருகனின் பாத்திரக்கடையை அடித்து உடைத்தும், உன்னை போட்டு விடுவேன் என்று கொலை மிரட்டலும் விடுத்துச் சென்றுள்ளார்.
இதனால் உயிருக்கு பயந்து போன சரவண முருகன் இதுகுறித்து நாகை வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
மேலும், வாஞ்சூர் முருகன் வந்து கடையை அடித்து நொறுக்கிய காட்சிகளும் கொலை மிரட்டல் விட்ட காட்சிகளும் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுநல ஆர்வலர்களும் வியாபார சங்கங்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.