அடேங்கப்பா….இரண்டு இட்லி, ஒரு வடை, 200 ரூபாய் பில்…எங்கு தெரியுமா??

இரண்டு இட்லி ஒரு வடை ரூபாய் 200க்கு விற்கப்படுவதாக விமான பயணிகள் அதிருப்தியுடன் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை விமான நிலையத்திலிருந்து தினமும் 25க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் அங்குள்ள உணவகங்களில் சாப்பிடும் போது விலையை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இரண்டு இட்லி ஒரு வடை 200 ரூபாய், சாம்பார் இட்லி 90 ரூபாய், புரோட்டா சப்பாத்தி 200 ரூபாய், ஆனியன் தோசை 220 என்ற விலையில் விற்கப்படுகிறது.

விமான நிலையத்தில் உள்ள உணவகங்களில் சாப்பிடும் போது கொள்ளை விலையை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News