ஏழை, எளிய மக்களுக்காக கோவையில் தனியார் அறக்கட்டளை சார்பில் ஒரு ரூபாய்க்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.
சாலையோரம் வாழ்ந்து வருபவர்கள், ஆதரவற்றோர், அன்றாடம் தினக்கூலிகளாக வேலை செய்யும் மக்களில் பலரும் ஒருவேளை உணவின்றி பசியில் வாடி வருகின்றனர். இவர்களுடைய பசியை போக்கும் விதமாக கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த தெய்வேந்திரன் அறக்கட்டளை சார்பில் வெறும் ஒரு ரூபாய்க்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.
அந்த பகுதியை சேர்ந்த மக்கள் உண்டியலில் ஒரு ரூபாய் மட்டும் செலுத்தி சாப்பிட்டுவிட்டு செல்கின்றனர். திங்கள் முதல் வெள்ளி வரை 5 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வகையான கலவை சாதங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஏழை மக்களின் பசியை போக்கும் உன்னத நோக்கோடு இந்த சேவையை செய்து வருவதாக றக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.