பாகிஸ்தான் நாட்டின் லஹோர் பகுதியில் உள்ள அல்லாமா இக்பாக் சர்வதேச விமான நிலையத்தில், பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக, பல்வேறு சர்வதேச விமானங்கள் தாமதம் ஆகியுள்ளன. இந்த தகவலை தொடர்ந்து, நிலையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு, மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
இதுவரை, யாரும் உயிரிழக்கவில்லை என்றும் தகவல் கிடைத்துள்ளது. குறைந்த மின்னழுத்தம் காரணமாக தான் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்றும், விரைவிலேயே இந்த நிலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும், விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த விபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்து உறுதி செய்வதற்கு புதிய அணி உருவாக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தின் காரணமாக, கத்தார் ஏர்வேஸ் விமானம் உட்பட மொத்தமாக 6 விமானங்கள், தாமதமாக சென்றன என்பது குறிப்பிடத்தக்கது.