சேலம் அரசு மருத்துவமனையில் தீ விபத்து!

அரசு மருத்துவமனையில் மின்கசிவு காரணமாக முதல் தளத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டது.

சேலம் அரசு மோகன் குமாரமங்களம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள அறுவை சிகிச்சைப்பிரிவில் இருந்து ஏசி மிஷினில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டது.

அறுவை சிகிச்சைப் பிரிவில் இருந்த நோயாளிகள் அனைவரும் அவசரமாக வெளியேற்றப்பட்டதால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.

தகவல் அறிந்த சம்பவயிடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இத்தீவிபத்தில் இருவர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து பகுதி முழுவதுமாக புகை மண்டலமாக இருப்பதால் நோயாளிகளுக்கு மூச்சு திணறல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News