பட்டப்பகலில் பெண் காவலருக்கு கத்திக்குத்து..காஞ்சியில் அதிர்ச்சி

காஞ்சிபுரம் விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் டில்லி ராணி. இவருடைய கணவர் மேகநாதன். இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் டில்லி ராணி இன்று காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் அருகே உள்ள சாலை தெரு பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அவரது கணவர் மேகநாதன் இடைமறித்து, வாகனத்தை காலால் எட்டி உதைத்துள்ளார். இதனால் பெண் காவலரான டில்லி ராணிநிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

இதையடுத்து மேகநாதன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பெண் காவலரை வெட்ட மேகநாதனை வருவதை பார்த்த டில்லி ராணி, தப்பித்து ஓடியுள்ளார். ஆனால், அவரை மேகநாதன் அவரை விடாமல் கொலை வெறியுடன் துரத்திக்கொண்டு ஓடியுள்ளார்.

அங்கிருந்த பொதுமக்கள் கத்தி கூச்சலிட்டத்தை பார்த்த மேகநாதன் அங்கு இருந்து தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவகாஞ்சி போலீசார், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த டில்லி ராணியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன், காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கணவரை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் காவலர் ஓட ஓட விரட்டி வெட்டப்பட்டுள்ள சம்பவம் காஞ்சிபுரம் நகர் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News