லீவு கிடைக்காததால் பெண் அரசு அதிகாரி தற்கொலை முயற்சி..!

சென்னை திருமுல்லைவாயலில் மார்கரேட்(36) என்ற பெண் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். தனது மேலதிகாரியிடம் மார்கரேட் விடுப்பு கேட்டுள்ளார். ஆனால், அவர் விடுப்பு கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மார்கரேட் 10-க்கும் மேற்பட்ட தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.மயங்கிய மார்கரேட்டை அவரது கணவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜே.ஜே.நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விடுப்பு கிடைக்கவில்லை என்பதற்காக பெண் அரசு அதிகாரி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News