பெண் மருத்துவர் லேப்டாப் சார்ஜ் போடும்போது மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மருத்துவக் கல்லூரியில் மருத்துவராக பணிபுரிந்து வந்தவர் சரணிதா (32). இவர் ஒரு மாதம் பயிற்சிக்காக சென்னைக்கு வந்து அயனாவரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பெண்கள் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார்.
இந்நிலையில் இன்று காலை பணிபுரிவதற்காக லேப்டாப்பை எடுத்த போது அதில் சார்ஜ் குறைவாக இருந்ததால், லேப்டாப்பிற்கு சார்ஜ் போட முயன்றுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் தாக்கியதில் அவர் சார்ஜர் வயரை கையில் பிடித்தவர் தரையில் சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.
சரணிதாவின் அலறல் சத்தத்தை கேட்டு அங்கு வந்த விடுதியை சேர்ந்த பெண்கள் சரணிதாவின் நிலையைகண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக அயனாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பயிற்சிக்காக சென்னை வந்த கோவை பெண் மருத்துவர் லேப்டாப் சார்ஜ் போடும்போது மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.