பத்தாம் வகுப்பு மறுதேர்வுக்கு பயந்து மாணவி ரத்தக்கொதிப்பு மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சம்பத் (பெயர் மாற்றம்). இவரது 16 வயது மகள் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில் நடந்து முடிந்த தேர்வில் மாணவி தோல்வி அடைந்தார்.
இதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட மாணவி மறுத்தேர்வு எழுத முடிவு செய்து அடுத்த மாதம் நடைபெறவுள்ள மறு தேர்வில் கலந்து கொள்வதற்காக விண்ணப்பித்துள்ளார்.
இந்நிலையில் தேர்வு நெருங்கி வரும் நிலையில் மாணவி சரியாக படிக்காததால் பயத்தில் நேற்று இரவு வீட்டில் இருந்த ரத்த கொதிப்பு மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
மாணவி வீட்டில் மயங்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து பெற்றோர் உடனே அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற சூளைமேடு போலீசார் இவ்விவகாரம் தொடர்பாக பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.