ஐந்து வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை; போக்சோ சட்டத்தில் கைது!

சென்னை மேற்கு தாம்பரம் படேல் நகரை சேர்ந்தவர் சௌந்தரராஜன் (37) எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அதில் மூத்த மகள் (7) தாம்பரம் மாநகராட்சி தொடக்க பள்ளியில் இரண்டாம் வகுப்பும், ஐந்து வயது இளைய மகள் அதே பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகின்றனர்.

ஐந்து வயது இளைய மகள் சில நாட்களாக சிறு நீர் கழிக்கும் பிறப்புறப்பில் எரிச்சலாக இருப்பதாக தாயிடம் தெரிவித்துள்ளார். இதற்கு உடல் சூடு காரணமாக இருக்கலாம் என்று நினைத்துள்ளார்.

அப்போது சௌந்தரராஜன் தனது இளைய மகளை குளிக்க வைக்கும் போது தவறாக நடந்த கொண்டதை தாய் பார்த்ததாக கூறப்படுகிறது.

அப்போது சந்தேகமடைந்த தாய் சிறுமியிடம் விசாரித்த போது சௌந்தரராஜன் பிப்ரவரி மாதம் முதல் சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்து இருந்ததை தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த தாய் இது குறித்து தாம்பரம் அனைத்து மகளிர் காவக் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் தலைமறைவாக இருந்த சௌந்தரராஜனை போலீசார் (செப்.3) இன்று காலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்

RELATED ARTICLES

Recent News