ஆப்ரிக்க நாடான உகாண்டாவில் புகிசா என்ற கிராமத்தில் ஒரு கணவர், 12 மனைவிகள், 102 குழந்தைகள் மற்றும் 586 பேரக் குழந்தைகள் என ஒரு குடும்பம் வாழ்கிறது. இந்த சாதனைக்கு சொந்தக்காரரின் பெயர் மூசா ஹசஹ்யயா. இவருக்கு வயது 67.
இவர் தனது 12 மனைவிகளிடமும் தயவு செய்து குழந்தை பெற்றக்கொள்ளாதீர்கள் என கோரிக்கை வைத்துள்ளார். மனைவிகளிடம் கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்ளுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளாராம்.
தனது 102 பிள்ளைகளையும் பெயரை நினைவுபடுத்தி அழைக்க முடியவில்லை என்றும் போதுமான வருமானம் இல்லாமல் தான் பெற்ற பிள்ளைகளை படிக்க வைக்க முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். அதனால் உகாண்டா அரசிடம் உதவி கேட்டிருக்கிறார்.