சிவகங்கை யாழினி சினிமாஸில் விஜய் நடித்துள்ள தி கோட் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. முதல் காட்சி காலை 9.00 மணிக்கு துவங்கியது ஏராளமான ரசிகர்கள் படத்தை காண்பதற்காக திரையரங்கம் முன்பு குவிந்திருந்தனர்.
மேளதாளங்கள் முழங்க ரசிகர்கள் ஆட்டம் பாட்டத்துடன் விஜயின் ப்ளக்ஸ் பேனருக்கு பாலாபிஷேகம் செய்து கொண்டாடி வருகின்றனர். விஜய் திரைப்படம் யாழினி சினிமாஸ் திரையரங்கில் திரையிடப்பட்டுள்ள நிலையில் அந்தப் பகுதிகளில் முழுவதும் ரசிகர்களின் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டு பட்டாசுகள் வெடிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகின்றது. சிவகங்கை நகர் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.