தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள அந்தேவனப்பள்ளியில் போலி மருத்துவரை போலீஸார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள அந்தேவனப்பள்ளியில் மருத்துவம் படிக்காமல் ஒருவர் கடந்த சில மாதங்களாக கிளினிக் வைத்து பொதுமக்களுக்கு சிகிச்சையளித்து வருவதாக வட்டார மருத்துவ துறையினருக்கு தகவல் வந்தது.
இதனையடுத்து டாக்டர் கிரிஜா, மருந்து கட்டுபாட்டு ஆய்வாளர் ராஜீவ்காந்தி, கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக்,மற்றும் தேன்கனிக்கோட்டை போலீஸார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வுசெய்தனர்.
அப்போது பாலக்கோடு பகுதியை சேர்ந்த தவமணி (57) என்பவர் மருத்துவம் படிக்காமல், மருத்துவமனை நடத்தி பொதுமக்களுக்கு சிகிச்சையளிப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் போலி மருத்துவர் தவமணியை போலீஸார் கைது செய்து, அங்கிருந்த மருந்துகளை பறிமுதல் செய்து, மருத்துவமனைக்கு சீல் வைத்து மூடினர்.