சிறுவன் தலையில் ஸ்டேப்ளர் பின்னால் தையல் போட்ட போலி மருத்துவர் கைது

தென்காசி மாவட்டம் பண்பொழி திருமலைக் கோயில் பகுதியை சேர்ந்த கௌஷிக் என்ற சிறுவன் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஏழாம் தேதி பள்ளிக்குச் சென்றபோது சைக்கிளில் இருந்து கீழே விழுந்த அவரது தலையில் பலத்த அடிபட்டது.

இதை அடுத்து அப்பகுதியில் இயங்கி வரும் சூர்யா ஹாஸ்பிடல் சிறுவன் அனுமதிக்கப்பட்டார். அப்போது அங்கு இருந்த மருத்துவர் அமிர்த லால் என்பவர் சிறுவனின் தலையில் தையல் போடுவதற்கு பதிலாக ஸ்டாப்ளர் மூலம் 14 இடங்களில் பின் அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறுவனுக்கு தலையில் வலி அதிகமானதோடு தலையிலும் சீழ் வைத்துள்ளது. இதை அடுத்து அவரை தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இது தொடர்பாக தென்காசி சுகாதாரத் துறை நடத்திய விசாரணையில் அமிர்த லால் போலி மருத்துவர் என்பதும் முறையான மருத்துவ படிப்பின்றி 12 ஆண்டுகளாக ஆங்கில முறை சிகிச்சை அளித்து வந்ததும் தெரிய வந்தது.

இதை அடுத்து அச்சன்புதூர் காவல்துறையினர் போலி மருத்துவரான அமிர்த லாலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மருத்துவமனையின் உரிமத்தை சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News