அதிமுகவின் முன்னாள் நிர்வாகியான ஏ.வி.ராஜு, சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில், நடிகை த்ரிஷா குறித்து, அவதூறாக பேசியிருந்தார்.
இதற்கு, பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், நடிகை த்ரிஷா தற்போது தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சில இழிவான மனிதர்கள், கவனத்தை ஈர்ப்பதற்காக செய்யும் செயல்களை பார்க்கும்போது, அருவெறுப்பாக உள்ளது என்று கூறியுள்ளார். மேலும், இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தன்னுடைய பதிவில் கூறியுள்ளார்.
இந்நிலையில் திரிஷா விவகாரம் அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் விளக்கம் அளித்துள்ளார். என்னைப் பற்றி சமூக வலைத்தளங்களிலும் சில ஊடகங்களிலும் திரைப்படத் துறையினரை நான் அவதூறாக பேசியதாக செய்தி வெளியாகியுள்ளது. நான் எந்த இடத்திலும் திரைப்படத்துறையினர் வருத்தம் அடையும் அளவிற்கு நான் பேசக்கூடிய நபர் அல்ல.
ஒருவேளை அப்படி நான் பேசியிருந்தால் உங்களுடைய மனது புண்பட்டிருந்தால் இந்த ஊடகத்தின் சார்பாக திரைப்படத்துறையினருக்கும் நடிகர் சங்கத்திற்கும் மற்றும் சம்பந்தப்பட்ட திரிஷாவிற்க்கும் எனது சார்பாக வருத்தத்தையும் மன்னிப்பையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.