2001 முதல் ஒவ்வொரு ஆண்டும் 100 முதல் 140 பேர் வரையிலான வீரர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர் என்று இந்திய ராணுவம் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய ராணுவம் எக்ஸ் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது: தற்போதுள்ள நடைமுறைக்கு ஏற்ப, உயிரிழந்த அக்னி வீரரின் உடல் மருத்துவ மற்றும் சட்ட நடைமுறைகளுக்குப் பிறகு அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆயுதப் படைகள், அக்னிபாதை திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முன்போ அல்லது அதற்குப் பின்னரோ வீரர்களுக்கு உரிய பலன்கள் மற்றும் மரியாதை தொடர்பாக வேறுபாடு காட்டியதில்லை.
ஆயுதப்படைகளில் துரதிர்ஷ்டவசமான தற்கொலை சம்பவங்கள் நிகழும்போது அந்த வீரரின் இறுதிச் சடங்கில் ராணுவ மரியாதை அளிக்கப்படுவதில்லை.
கடந்த 2001 முதல் ஒவ்வொரு ஆண்டும் 100 முதல் 140 பேர் வரையிலான வீரர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர். இந்த வீரர்களுக்கு இறுதிச் சடங்குகளை நடத்துவதற்கான உடனடி நிதியுதவி உட்பட, குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்கப்படுகிறத். இதற்கு முன்னுரிமையும் அளிக்கப்படுகிறது” என்று கூறியுள்ளது.