கொம்பன், பரியேறும் பெருமாள், ஜெயிலர் உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்தவர் மாரிமுத்து.
தற்போது, எதிர்நீச்சல் என்ற சீரியலில் நடித்து, சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில், பிரபலமாக இருந்து வந்தார்.
இந்நிலையில், நடிகர் மாரிமுத்து, இன்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த தகவல், சினிமா வட்டாரங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.