இபிஎஸ், ஓபிஎஸ் படங்கள், பெயர்கள் இல்லாமல் இரட்டை இலைக்கு வாக்கு சேகரிப்பு!

மணப்பாறையில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலைக்கு வாக்கு சேகரிப்பு சுவர் விளம்பரங்கள் உழைக்கும் கரங்கள் அமைப்பின் மூலம் எழுத்தப்பட்டு வருகிறது. இதில் இபிஎஸ், ஓபிஎஸ் பெயர்கள் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சி மாவட்டம் மணப்பாறையில், நடைபெறவுள்ள 2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தின் உரிமை குரல் ஒலித்திட, மக்கள் விரோத திமுக அரசுக்கு பாடம் புகட்டிட அதிமுக கூட்டணி வெற்றி பெற, பிப்ரவரி 24-ல் புரட்சி தலைவி அம்மா 76-வது பிறந்த நாளில் சபதம் எடுப்போம் என இரட்டை இலைக்கு வாக்கு சேகரிக்கும் சுவர் விளம்பரங்கள் நகர் முழுவதும் புரட்சி தலைவரின் வழியில் உழைக்கும் கரங்கள் என எழுதப்பட்டு வருகிறது.

அதிமுகவிற்கு வாக்கு சேகரிப்பில் முனைப்புடன் எழுதப்பட்டு வரும் இச்சுவர் விளம்பரங்களில் எந்த நிர்வாகிகள் பெயரும் எழுதாத நிலையில், இபிஎஸ் – ஒபிஎஸ் படங்கள், பெயர்கள் கூட இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News