மும்பை மற்றும் நேவி மும்பையில் உள்ள கடற்கரை பகுதி ஃபிலமிங்கோ பறவைகளின் வாழ்விடமாக இருந்து வருகிறது. இந்த வகை புலம் பெயர்ந்த பறவைகள், டிசம்பர் காலகட்டத்தில், இப்பகுதிக்கு வருவது வழக்கம்.
மேலும், மார்ச் மற்றும் ஏப்ரல் வரை, இப்பகுதியில் தான் அந்த பறவைகள் இருக்கும். இந்நிலையில், ஐக்கிய அமீரக விமானம், EK 508, நேற்று இரவு 8.30 மணிக்கு, மும்பை விமான நிலையத்தில் தரையிறங்க இருந்தது.
அப்போது, விமான நிலையத்தில் இருந்த ஃபலமிங்கோ பறவைகளின் மந்தை மீது, விமானம் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், அங்கிருந்த 40-க்கும் மேற்பட்ட பறவைகள் உயிரிழந்துள்ளன.
சமீப காலங்களாக ஃபிலமிங்கோ பறவை இனங்கள் அழிந்து வரும் நிலையில், விமான விபத்தில் பறவைகள் உயிரிழந்தது இதுதான் முதல்முறை என்று கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து பேசிய NatConnect என்ற இயற்கை நல அறக்கட்டளையின் இயக்குநர் பி.என்.குமார், “அந்த பகுதி முழுவதும் பறவைகளின் சடலங்கள் சிதறி கிடந்தது. உடைந்த றெக்கைகள், அலகுகள் என்று பறவையின் உடல் பாகங்கள் சிதறி கிடந்தன” என்று கூறினார்.