எலான் மஸ்குக்கும் – மார்க் ஸுகர்பெர்க்குக்கும் சண்டை.. – ட்விட்டரில் லைவ் டெலிகாஸ்ட்..

ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனத்தின் மூலமும், டெஸ்லா என்ற உயர் ரக சொகுசு கார் மூலமும், உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தவர் எலன் மஸ்க்.

நஷ்டத்தில் ஓடிக் கொண்டிருந்த ட்விட்டர் நிறுவனத்தை, சமீபத்தில் வாங்கிய இவர், அதில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தார்.

சில நாட்களுக்கு முன்பு கூட, ட்விட்டரின் பெயரை எக்ஸ் என்று மாற்றியிருந்தார். இந்நிலையில், இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், மெட்டா நிறுவனத்தின் தலைவரான மார்க் ஸூகர்பெர்க்குடன் நேருக்கு நேர் மோத இருப்பதாக பதிவிட்டுள்ளார்.

இந்த சண்டை ‘எக்ஸ்’ (ட்விட்டர்) தளத்தில் லைவ் ஸ்ட்ரீமிங்கில் நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ள அவர், “ஆண்களுக்கு போர் புரிவது பிடிக்கும். இது நாகரிகமான போர். இந்தப் போர் மூலம் கிடைக்கும் வருமானம் படைவீரர்களுக்குச் செல்லும்” என்று தெரிவித்துள்ளார்.

பேஸ்புக், இன்ஸ்டா, மெசெஞ்சர், வாட்ஸ்அப் ஆகிய சமூக வலைதளங்களை மொத்தமாக கொண்ட நிறுவனத்தை தான் மெட்டா என்று அழைப்பார்கள்.

இந்த மெட்டா நிறுவனம், சமீபத்தில் ட்விட்டருக்கு எதிராக த்ரெட்ஸ் என்ற செயலியை அறிமுகப்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News