ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் பாஜக முன்னிலையில் உள்ளது. தெலங்கானாவில் மட்டுமே காங்கிரஸ் கட்சி முன்னிலையில் நீடித்து வருகிறது.
இந்நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள செய்தியில்,
சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் நல்ல நிர்வாகம், வளர்ச்சி, அரசியல் ஆகியவற்றுக்கு மக்கள் உறுதுணையாக இருப்பதற்கு இந்த தேர்தல் முடிவுகள் சாட்சி.
பாஜக மீது அசைக்க முடியாத ஆதரவை வழங்கிய இந்த மாநிலங்களின் மக்களின் உறுதியான ஆதரவிற்காக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அவர்களின் நல்வாழ்வுக்காக அயராது உழைப்போம் என்று அவர்களுக்கு உறுதியளிக்கிறேன்.
கடந்த சில ஆண்டுகளாக பாஜகவிற்கு வழங்கிய தொடர் ஆதரவிற்காக தெலங்கான மாநில மக்களுக்கு நன்றி.
தேர்தல் வெற்றிக்காக உழைத்த கட்சி அயராது உழைத்த தொண்டர்கள், நிர்வாகிகள், பொறுப்பாளர்களுக்கு சிறப்பு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று மோடி தெரிவித்துள்ளார்.