வேளச்சேரி ஏரியில் மூதாட்டி சடலமாக மீட்பு!

சென்னை வேளச்சேரி ஏரியில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் ஒன்று காலையில் மிதந்து கொண்டிருப்பதாக வேளச்சேரி போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் நிகழ்விடம் வந்த போலீசார், வேளச்சேரி தீயணைப்பு துறையினரை வரவழைத்து படகு மூலம் சென்று, மிதந்து கொண்டிருந்த சடலத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இராயபேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News