ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் உள்ள மண்டி தொகுதியில், பாஜக சார்பில், நடிகை கங்கனா ரணாவத் போட்டியிடுகிறார்.
இவரை பற்றி, மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவர் சுப்ரியா ஸ்ரீநாத், இணையத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்த நடிகையின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படும் வகையில் சுப்ரியா வெளியிட்டிருந்த பதிவு, இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இவ்வாறு இருக்க, திடீரென அந்த பதிவை நீக்கிய சுப்ரியா, தான் அந்த கருத்தை கூறவில்லை என்றும், யாரே தன்னுடைய சோசியல் மீடியா கணக்கை ஹோக் செய்துவிட்டார்கள் என்றும் கூறியிருந்தார்.
இதேபோல், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜியின் குடும்பம் குறித்து, பாஜக தலைவர் திலிப் கோஷ் , சர்ச்சை கருத்து ஒன்றை கூறியிருந்தார்.
இந்த இரண்டு சம்பவங்களும், தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு சென்றதையடுத்து, அவர்களுக்கு கண்டனம் தெரிவித்து, கட்சி அலுவலகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது, பொது வெளியில் இதுமாதிரியான இழிவான கருத்துக்களை வெளியிடக் கூடாது என்றும், தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.