போதைப் பொருள் கடத்தலில் மூளையாக செயல்பட்டு, தற்போது தலைமறைவாக இருக்கும் திரைப்பட தயாரிப்பாளரான ஜாபர் சாதிக் வீட்டின் முன்பு மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சம்மன் ஒட்டிய நிலையில் தற்போது வீட்டிற்கு சீல் வைத்துள்ளனர்.
டெல்லியில், போதைப்பொருள் கடத்தலில் சிக்கிய கும்பலுக்கு பின்னணியில் சினிமா திரைப்பட தயாரிப்பாளரான ஜாபர் சாதிக் இருப்பது விசாரணையில் அம்பலானது. சுமார் ரூ.2,000 கோடி வரை கடத்தலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
கடத்தல் சம்பவம் தொடர்பாக ஜாபர் சாதிக் போலீஸ் தேடுவதால் அவர் தலைமறைவாக இருக்கிறார். அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஜாபர் சாதிக் நேரில் ஆஜாராக கூறப்பட்டு இருந்தது. அவர் ஆஜராகாத காரணத்தால் சென்னை மயிலாப்பூர் டொம்மிங் குப்பம் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக் வீடு, புரசைவாக்கம் டவுட்டன் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக்கின் தயாரிப்பு நிறுவன அலுவலகத்திலும் சம்மன் ஒட்டப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மனை அதிகாரிகள் ஒட்டிவிட்டு சென்றனர். இந்த நிலையில் ஜாபர் சாதிக்கின் வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.