காவி நிறத்தில் மாற்றப்பட்ட டிடியின் லோகோ! இணையத்தில் எழுந்த சர்ச்சை!

இந்தியா அரசின் அதிகாரப்பூர்வ செய்தி ஒளிபரப்பு நிறுவனம் தான் தூர்தர்ஷன். இந்தியாவில் உள்ள பல்வேறு பிராந்திய மொழிகளில், இந்த செய்தி தொலைக்காட்சி செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்நிறுவனத்தின் எக்ஸ் தளப் பக்கத்தில், தற்போது பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், புதிய அவதாரத்தில் தூர்தர்ஷன். எப்போதும் இல்லாத வகையில், செய்தி பயணத்திற்கு தயார் ஆகுங்கள். அனைத்து புதிய டிடி செய்திகளையும் அனுபவியுங்கள் என்று கூறப்பட்டிருந்தது.

மேலும், தங்களது பழைய லோகோவை நீக்கிவிட்டு, காவி நிறத்திலான புதிய லோகோவை டிடி வெளியிட்டிருந்தது. இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே, பலரிடம் இருந்து எதிர்ப்பு அலைகள் எழுந்த வண்ணம் உள்ளன.

இந்த அறிவிப்பு குறித்து, டிடியின் முன்னாள் சி.இ.ஓ-வும், ராஜ்ய சபா உறுப்பினருமான ஜவஹர் சிர்கார் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், “டிடியின் வரலாற்று சிறப்புமிக்க லோகே இப்போது காவி நிறத்தில். டிடியின் முன்னாள் சி.இ.ஓ-ஆக இருப்பதால், இதை எச்சரிக்கையுடனும், வருத்தத்துடனும் நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.” என்று கூறியுள்ளார்.

மேலும், பாஜகவை பிரச்சாரம் செய்வதற்கான நிறுவனமாக இது மாறிவிட்டது என்றும் அவர் மறைமுகமாக சாடியிருந்தார். ஆனால், இதுகுறித்து டிடியின் நெருங்கிய வட்டாரங்கள், விளக்கம் அளித்துள்ளன.

அதன்படி, டிடியின் புதிய லோகோவை பாஜகவுடன் இணைத்து பேசுவது என்பது தவறான விஷயம். டிடி நிறுவனம், தன்னுடைய லோகேவை, நீலம், மஞ்சள், சிவப்பு என்று பல்வேறு நிறங்களில் இதற்கு முன்பு மாற்றியுள்ளது.

ஆனால், அந்த லோகோவின் டிசைனில் உள்ள இரண்டு இதழ்கள் மற்றும் உலக உருண்டையின் வடிவம் எப்போதும் மாற்றப்பட்டதே இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இவ்வாறு விளக்கம் அளிக்கப்பட்ட போதிலும், எதிர்கட்சியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News