“இன்னும் ஒரே வாரம் தான்..,” : ரஷ்யா – உக்ரைன் போர் குறித்து டெனால்டு ட்ரம்ப்!

ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்குமான போர் என்பது, கிட்டதட்ட 3 வருடங்களாக நடைபெற்று வருகிறது. இந்த போரில், இரண்டு தரப்பிலும் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று, தற்போது அமெரிக்காவில் ஆட்சி அமைத்துள்ள டெனால்டு டிரம்ப், தீவிரமாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

மேலும், இந்த போருக்கு உக்ரைன் தான் காரணம் என்றும், போருக்கு அமெரிக்கா வழங்கிய ராணுவ உதவிகளின் மொத்த மதிப்பான 180 பில்லியன் டாலர்களை, உக்ரைன் திருப்பித் தர வேண்டும் என்றும் கூறி வருகிறார். மேலும், அந்த பணத்தை திருப்பித் தருவதற்கு பதிலாக, உக்ரைன் நாட்டில் உள்ள அரியவகை தாதுக்களை எடுத்துக் கொள்ள, அமெரிக்கா முயற்சித்து வருகிறது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப், இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அமைதிப்படையினரை, உக்ரைனில் நிலைநிறுத்த ரஷ்ய அதிபர் சம்மதிப்பார் என்று நம்புவதாக கூறினார். மேலும், ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது என்றும், இன்னும் ஒரு வாரத்தில் போர் முடிவுக்கு வந்துவிடும் என்றும் கூறினார்.

RELATED ARTICLES

Recent News