கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தை கண்டித்து, இந்திய மருத்துவர்கள் சங்கம் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில், தமிழ்நாட்டிலும் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை, திருச்சி, கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேலை நிறுத்தம் காரணமாக புறநோயாளிகள் பிரிவு மூடப்பட்டுள்ளது. அவசர சிகிச்சை பிரிவு மற்றும் அத்தியாவசிய சேவைகள் வழக்கம்போல் இயங்கி வருகிறது. நாடு முழுவதும் டாக்டர்கள் வேலை நிறுத்தத்தால் மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.