திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே இருசக்கர வாகனம் மீது டிப்பர் லாரியை மோதிய விபத்தில் ஹோமியோபதி மருத்துவர் சம்பவ இடத்தில் பலியானார்.
வத்தலகுண்டு பிலீஸ்புரம் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (70) ஹோமியோபதி மருத்துவராக கிராமப்புறங்களில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பாலகிருஷ்ணன் இன்று காலை மருத்துவ பணிக்காக விராலிப்பட்டி நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
பழைய வத்தலகுண்டு ஊருக்குள் சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இச்சம்பவத்தில் இழுத்துச் செல்லப்பட்ட ஹோமியோபதி மருத்துவர் பாலகிருஷ்ணன் படுகாயத்துடன் சம்பவ இடத்தில் பலியானார்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வத்தலகுண்டு காவல்துறையினர் பாலகிருஷ்ணன் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக வத்தலகுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் பின்னர் விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.