பணிநீக்கம் செய்யப்பட்ட ஷர்மிளாவுக்கு தேவையான உதவிகள் அளிக்கப்படும் – கனிமொழி எம்.பி உறுதி

கோவையைச் சேர்ந்த ஷர்மிளா என்பவர் தனியார் பேருந்தில் ஓட்டுநராக பணியில் சேர்ந்த போது தமிழகம் முழுவதும் பிரபலமானார். இவரை அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் பேருந்திற்கே வந்து சந்தித்து வாழ்த்தி வந்தனர்.

கடந்த வாரம் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் சந்தித்த நிலையில் இன்று காலை திமுக எம்பி கனிமொழி பேருந்தில் பயணம் செய்து ஓட்டுநர் ஷர்மிளாவை வாழ்த்தினார். இத்தகைய சூழலில் ஓட்டுநர் ஷர்மிளா பணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த தகவல் அறிந்த கனிமொழி எம்.பி அவர்கள் பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு வேறு வேலை மற்றும் தேவையான உதவிகளை அளிப்பதாக உறுதியளித்தார்.

RELATED ARTICLES

Recent News