இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் திமுக தொகுதி பங்கீட்டு குழு ஆலோசனை..!

மக்களவைத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில், ஆளும் கட்சியான திமுக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை வரையறை செய்ய தொகுதிப் பங்கீட்டு குழு அமைத்துள்ளது.

இந்தக் குழு கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிகளை வரையறை செய்யும். அந்தவகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் இக்குழு இன்று பிற்பகல் ஆலோசனை நடத்தவுள்ளது.

சென்னை அறிவாலயத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனையின் முடிவில் மக்களவை தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News