விவாகரத்து செய்வோர் மற்றும் திருமணம் கடந்த உறவு வைத்திருப்போர் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என சீனாவை சேர்ந்த ஒரு நிறுவனம் தனது ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீனாவில் ஷெஜியாங் மாகாணத்தை சேர்ந்த ஒரு நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அறிவிப்பை ஒன்று வெளியிட்டுள்ளது. ஊழியர்கள் அனைவரும் கள்ள உறவு வைத்துக்கொள்ளக்கூடாது, திருமணம் தாண்டிய உறவு வைத்துக்கொள்ளக்கூடாது, விவாகரத்து செய்யக்கூடாது என தடை விதித்துள்ளது. இதனை மீறினால் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என அந்நிறுவனம் எச்சரித்துள்ளது.
இந்த செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. மேலும், ஊழியர்களின் தனிப்பட்ட விவகாரங்களில் தலையிடுவதாக சம்பந்தப்பட்ட சீன நிறுவனத்தை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.