BREAKING || உயர்நீதிமன்றம் தீர்ப்பு.. மீண்டும் தோல்வி அடைந்த ஓ.பி.எஸ்.. பொதுச் செயலாளராக மாறிய ஈ.பி.எஸ்..!

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடத்தப்பட இருந்தது. ஆனால், அந்த தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடந்து வந்த நிலையில், கடந்த 22-ஆம் தேதி அன்று, இருதரப்பு வாதங்களும் முடிவடைந்தது. இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது. அதில், அதிமுக சார்பில் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த தடை விதிக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், ஓ.பி.எஸ் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த செய்து, நீதிபதி உத்தரவிட்டார். இதற்கிடையே, அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மேலும், வெற்றி பெற்றதற்கான சான்றிதழையும் அவர் பெற்றுக் கொண்டார். இதனை அறிந்த அதிமுக தொண்டர்கள், இனிப்புகள் வழங்கி, பட்டாசுகள் வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News