முன்பணத்தை மட்டும் வாங்கிவிட்டு கால்ஷீட் கொடுக்காமல், தனுஷ் இழுத்தடித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டையொட்டி, தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், அவருக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டுள்ளது.
இதனால், நடிகர் தனுஷ்-க்கு மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இயக்குநர் பேரரசு, சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, தனுஷ்-க்கு ரெட் கார்டு வழங்கப்பட்டதற்கு ரஜினிக்கு தொடர்பு இருப்பதாக பரவி வரும் தகவல் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த பேரரசு, அது சுத்தப்பொய் என்றும், ரஜினிக்கும், இதற்கும் சம்பந்தமில்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும், ரஜினி இந்த மாதிரியான செயல்களை செய்யக் கூடியவர் அல்ல என்று கூறிய பேரரசு, இது தனுஷ்-க்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடையே உள்ள பிரச்சனை தான் என்று தீர்க்கமாக தெரிவித்தார். இருதரப்பும் விரைவில் சுமூகமாக பேசி, பிரச்சனையை தீர்த்துக் கொள்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.