லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ திரைப்படம் இன்று வௌியானது. இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா,மற்றும் முண்னனி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர்.இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
பல்வேறு எதிா்பாா்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள இப்படத்தை ரசிகா்கள் கொண்டாடிவருகின்றனா்.
இந்நிலையில் ‘லியோ’ படம் குறித்து அதிா்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, ‘லியோ’ திரைப்படத்தின் தியேட்டர் பிரிண்ட் இணையத்தில் லீக்காகியுள்ளது. மக்கள் பலர் இப்படத்தை இணையத்தின் மூலம் பார்த்து வருகின்றனர். நீதிமன்ற உத்தரவையும் தாண்டி படம் வெளியான சில மணி நேரங்களில் இணையத்தில் லீக்கானது அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.