தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
ராயன் படத்தில் தனுஷ் உடன் இணைந்து துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் எஸ்.ஜே.சூர்யா, செல்வரகாவன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
இப்படம் உலகளவில் ரூ.150 கோடி வசூலித்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் நடித்த படங்களிலேயே இதுவே பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமாக மாறியுள்ளது.
இந்நிலையில் இப்படம் ஆகஸ்ட் 23-ஆம் தேதி OTT தளத்தில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.