டெல்டா மாவட்டம்: நெல்லில் ஈரப்பத அளவு அதிகரிப்பு!

மழையில் நனைந்த பொருள்களை ரேசன் கடைகளில் விநியோகம் செய்யக்கூடாது என்று, தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம், விவசாயிகளிடம் இருந்து மத்திய அரசின் இந்திய உணவு கழகம் சார்பில், நெல் கொள்முதல் செய்கிறது.
தற்போது 17 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை வாங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

தற்போது, டெல்டா மாவட்டங்களில் பெய்த கன மழையால், நெல்லில் ஈரப்பத அளவு மிகவும் அதிகரித்துள்ளது. எனவே, நடப்பு சீசனில் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதி அளிக்குமாறு, மத்திய அரசின் உணவு மற்றும் பொது வினியோக திட்ட துறை செயலருக்கு, தமிழக கூட்டுறவு மற்றும் உணவு துறை செயலர் ராதாகிருஷ்ணன் கடிதம் அனுப்பி உள்ளார்.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால், போதுமான இடவசதி இல்லாத ரேசன் கடைகளில் பொருள்கள் நனைவதாக தகவல் வெளியானது. அதுபோன்று மழையில் நனையும் பொருள்களை ரேசனில் விநியோகம் செய்யக் கூடாது என்று, அனைத்து கடைகளுக்கும் தமிழக அரசு கடிதம் அனுப்பியுள்ளது.

RELATED ARTICLES

Recent News