பைக்கில் சாகசம் செய்த ஸ்பைடர்மேனை தட்டி தூக்கிய போலீஸ்

டெல்லி நகர சாலையில் நம்பர் பிளேட் இல்லாத ஒரு பைக்கில் ஸ்பைடர்மேன் உடையில் ஆண் ஒருவரும், ஸ்பைடர்வுமன் உடையில் பெண் ஒருவரும் பயணித்தனர். சாகசம் செய்தபடி செல்லும் அவர்களது வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் நஜாப்கர் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் 20 வயதான ஆதித்யா மற்றும் 19 வயதான அவரது தோழி தான் அது என உறுதியானது.

அவர்கள் மீது பொது மக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை இயக்கியது உட்பட சுமார் 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News