டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. மதுபான கொள்கை முடிவு செய்ததில் ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ., முதல்வர் கெஜ்ரிவாலை கைது செய்தனர். இந்த வழக்கில் ஆறு மாதங்கள் சிறையில் இருந்த கெஜ்ரிவாலுக்கு, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் ஜாமின் அளித்தது.
இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் தனது டெல்லி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுதொடர்பான கடிதத்தை துணைநிலை ஆளுநரை நேரில் சந்தித்து வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்ட அதிஷி, ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரினார். கவர்னரை கெஜ்ரிவால் சந்தித்தபோது டில்லி அமைச்சர்கள் மற்றும் ஆம் ஆத்மி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.