சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவான திரைப்படம் கோலியோன் கி ராஸ்லீலா ராம் லீலா. கடந்த 2013-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம், ரன்வீர் சிங்கிற்கும், தீபிகா படுகோனுக்கும் இடையே காதல் ஏற்பட்டது.
அடுத்த கட்டத்திற்கு இந்த காதல் நகர்ந்த நிலையில், 2018-ஆம் ஆண்டு அன்று, இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களது திருமண வாழ்க்கை சுமூகமாக சென்றுக் கொண்டிருந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் அன்று, அழகிய பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் தங்கள் குழந்தையின் பெயரை தம்பதியினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்த தம்பதி, ‘துவா படுகோனே சிங் என்று பெயர் வைத்துள்ளதாக கூறியுள்ளனர்.
மேலும், துவா என்ற பெயருக்கு விளக்கம் கொடுத்துள்ள அவர்கள், துவா என்றால் வேண்டுதல் என அர்த்தம் என்றும், கடவுளிடம் எங்களது வேண்டுதலுக்கு கிடைத்த பரிசு என்பதால், இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளனர்.