நாட்டின் அனைத்து கிராமங்களிலும், 26,316 கோடி ரூபாய் மதிப்பில், ‘4ஜி’ சேவை வழங்க, 2022 ஜூலை 22ல் தேதி அனுமதி அளிக்கப்பட்டது. இதற்காக, தமிழகத்தில், 218 இடங்கள், 516 கிராமங்கள் கண்டறியப்பட்டன. அதில், 185 வருவாய் கிராமங்கள், காடுகள் சார்ந்த எட்டு கிராமங்களில் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இனி அனைத்து, 2ஜி, 3ஜி சிம் கார்டுகளையும், 4ஜி சேவை சிம் கார்டுகளாக மாற்ற உள்ளோம். அதனால், வாடிக்கையாளர்கள் தங்களிடம் உள்ள, 2ஜி, 3ஜி சிம் கார்டுகளை அருகில் உள்ள சேவை மையத்தில் கொடுத்து, புதிய சிம் கார்டுகளை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என, பி.எஸ்.என்.எல்., தமிழக வட்டத்தின் தலைமை பொது மேலாளர் தமிழ்மணி தெரிவித்தார்.