வணிகர் சங்கத்தின் தலைவர் மறைவுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல்

வணிகர் சங்கத்தின் தலைவர் வெள்ளையன் கடந்த மூன்றாம் தேதி உடல்நலக்குறைவால் சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஒரு வாரமாக நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்து இன்று (செப்.10) உயிரிழந்தார்.

வெள்ளையன் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன், மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். வணிகர் பெருமக்களின் நலனுக்காக உழைத்த அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையைச் சேர்ந்த அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன் எனப் பதிவிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News