நீட் தேர்வு.. மாவட்டத்தில் முதலிடம்.. மாநிலத்தில் 2-வது இடம்.. ஏழை தொழிலாளியின் மகள் சாதனை..

சிவகங்கை அருகே கட்டிட தொழிலாளியின் மகள், நீட் தேர்வில் மாவட்டத்தில் முதலிடம் பிடித்து, சாதனை படைத்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மட்டாங்காடு பகுதியை சேர்ந்தவர் அன்னபூரணி. கட்டிட தொழிலாளியின் மகளான இவர், மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவோடு, சமீபத்தில் நீட் தேர்வு எழுதியிருந்தார்.

இந்த தேர்வின் முடிவுகள் தற்போது வெளியான நிலையில், 700-க்கு 538 மதிப்பெண்கள் பெற்று, மாவட்ட அளவில், முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ளார்.

இதுமட்டுமின்றி, நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கான பட்டியலில், மாநில அளவில் 2-வது இடத்தை அந்த பெண் பிடித்துள்ளார். இதனை அறிந்த அப்பகுதி சமூக ஆர்வலர்கள், மாணவிக்கு தங்களது பாராட்டுக்களை கூறி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News