பிரபல இசையமைப்பாளர் டி.இமான் பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அந்த பேட்டியில், சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டதாக கூறினார்.
மேலும், இந்த ஜென்மத்தில், சிவகார்த்திகேயன் உடன் இணைந்து பணியாற்ற மாட்டேன் என்றும் தெரிவித்தார். இந்த தகவல், இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுமட்டுமின்றி, டி.இமானுக்கு விவாகரத்து ஆனதற்கு, நடிகர் சிவகார்த்திகேயன் தான் காரணம் என்றும், கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, இமானின் முதல் மனைவி மௌனம் கலைத்துள்ளார்.
அதாவது, “எனக்கும், இமானுக்கும் விவாகரத்து ஆகக் கூடாது என்று, சிவகார்த்திகேயன் பல்வேறு முயற்சிகளை எடுத்தார். ஆனால், அது இமானுக்கு பிடிக்கவில்லை.
வேறொரு பெண்ணை தேர்வு செய்து வைத்துவிட்டு தான், என்னை விவாகரத்து செய்யவே அவர் முடிவெடுத்தார். இறுதியில், அவரது மிரட்டல்களுக்கு பயந்து, நானும் விவாகரத்து கொடுத்துவிட்டேன்.
தற்போது, சினிமா வாய்ப்புகள் இல்லாததால், இவ்வாறு பேசி, வாய்ப்புகள் பெற, இமான் முயற்சிக்கிறார்“ என்று அவரது முதல் மனைவி கூறியுள்ளார்.