கள்ள ஓட்டுப்போட வந்த இளைஞர்கள்….தண்டனை கொடுத்த சி.ஆர்.பி.எப் வீரர்கள்

ஏழு கட்டங்களாக நடைபெறும் லோக்சபா தேர்தலில் 4 கட்டங்கள் நேற்றுடன் (மே 13) முடிவடைந்தன. நேற்று ஆந்திராவில் சித்தூர், கடப்பா, அனந்தபூர் உட்பட பல இடங்களில் ஓட்டுச்சாவடியில், ஓய்.எஸ்.ஆர் மற்றும் தெலுங்கு தேச கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில் திருப்பதியில் உள்ள தொட்டாபுரம் ஓட்டுச்சாவடியில் இரு இளைஞர்கள் வாக்காளர்கள் போல் வரிசையில் நின்றிருந்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிஆர்பிஎப் வீரர்கள் அவர்களை பார்த்து சந்தேகம் அடைந்தனர்.

இருவரையும் தனியாக அழைத்து சென்று விசாரித்தனர். முன்னுக்கு பின் முரணாக பேசியதை அடுத்து, நடுரோட்டில் மண்டியிட வைத்து தடியால் அடித்து வெளுத்தனர். அடி தாங்க முடியாமல், அந்த இளைஞர்கள் கள்ள ஓட்டு போட வந்ததை ஒப்புக்கொண்டனர். பிறகு, அவர்களை இதுபோன்ற குற்ச்சம்பவங்களில் ஈடுபடக்கூடாது என எச்சரித்து அனுப்பினர்.

RELATED ARTICLES

Recent News