மகாவிஷ்ணுவை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு நீதிமன்றம் அனுமதி

சென்னை அசோக் நகா் மற்றும் சைதாப்பேட்டை அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகள் மத்தியில் மேடைப் பேச்சாளா் மகாவிஷ்ணு நடத்திய சொற்பொழிவு சா்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து மகாவிஷ்ணு மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரை சென்னை விமான நிலையத்தில் கைது செய்தனர்.

கடந்த செப்டம்பர் 7ம் தேதி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணு, 8ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் சர்ச்சைப் பேச்சாளர் மகாவிஷ்ணுவை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

RELATED ARTICLES

Recent News